ரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகிறது!

தனுஷ் தயாரிப்பில், லைக்கா வெளியீட்டில், ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

0a1d

வணிக ரீதியில் வெற்றி பெற்ற ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, ரஜினி – இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரேஷியும், பிரதான வில்லனாக நானா படேகரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மும்பையை கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ், தனது உண்டர்பார் பட நிறுவனம் சார்பில் இதை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று இதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

லைக்கா தயாரிப்பில், ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிவரும் ‘டூ பாயிண்ட் ஓ’ திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் முடிந்தபாடாக இல்லை. இப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Read previous post:
0a1c
‘சிவா மனசுல புஷ்பா’: தலைப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவையும், அவர் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளையும் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். “என் கட்சித் தலைவி ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்துவிட்டார். அவரது

Close