‘காலா’ பார்த்தேன்: பாராட்டுக்கள் பா.ரஞ்சித்!

இன்று (07-06-2018) பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி. ‘காலா’ படம் பார்த்தேன்.

“இது ரஜினி படமா? இயக்குனர் பா.ரஞ்சித் படமா?” என்ற கேள்விக்கு எனது பதில்: இது ரஜினி படம் அல்ல; முழுக்க முழுக்க பா.ரஞ்சித் படம்.

“இல்லை, இது ரஜினி படம் தான்” என்று அடம் பிடிப்பீர்களேயானால், நல்லது… ஏற்றுக்கொள்கிறேன்… இது ரஜினி படம் தான்; ஆனால், ரஜினிக்கு எதிரான ரஜினி படம்!

புரியவில்லையா?

நிஜ வாழ்க்கையில் ரஜினி வைத்திருக்கும் பிற்போக்கான கருத்துக்களுக்கு எதிரான முற்போக்குக் கருத்துக்களை, சினிமாவுக்காக ரஜினியே பேசி நடித்திருக்கும் படம்!

‘காலா’ பட வெளியீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பொன்.ராதா, தமிழிசை, அர்ஜூன் சம்பத் வகையறாக்கள் இந்த படத்தைப் பார்த்தால், ‘ஏன் தான் இந்த படத்தை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்தோமோ’ என்று பாத்ரூம் கதவைப் பூட்டிக்கொண்டு கதறிக் கதறி அழுவார்கள்…

காவிக்கு பலமான செருப்படி!.

எல்லாப் புகழும் கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களுக்கே!

பாராட்டுக்கள் பா.ரஞ்சித்! உங்கள் சிறப்பான கலைப்பணி தொடரட்டும்!!

ராஜய்யா

ஆசிரியர், ஹீரோ நியூஸ் ஆன்லைன்

Read previous post:
0a1d
தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்

Close