மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு!

மார்க்சிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற இக்கட்சியின் மாநில மாநாட்டில் அவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970ஆம் ஆண்டு இக்கட்சியில் இணைந்த பாலகிருஷ்ணன்,  பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாநாட்டில், மாநில குழு உறுப்பினர்களாக 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Read previous post:
0a1c
பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப் பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Close