ரஜினியின் மனைவி செய்த ரூ.6.2 கோடி மோசடி: உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி – முழுவிவரம்!

ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த திரைப்படம் ‘கோச்சடையான்’. இத்தோல்விப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இயக்குனராகவும், அவரது மகள் சௌந்தர்யா தலைவராகவும் உள்ள ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற நிறுவனத்துக்கும்,  பெங்களூருவைச் சேர்ந்த ‘ஆட்பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ‘கோச்சடையான்’ படத்தின் தமிழ்நாட்டு வினியோக உரிமையையும், லாபத்தில் 12 சதவிகிதத்தையும் ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்குவது என்ற இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், லதா – சௌந்தர்யாவின் மீடியா ஒன் நிறுவனம் ரூ.14.90 கோடியை ஆட்பீரோ நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும், இத்தொகைக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாக, ஆட் பீரோ நிறுவனத்துக்குத் தெரியாமல், மோசடியாக, ‘கோச்சடையான்’ படத்தின் வினியோக உரிமையை ‘ஈராஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் விற்றுவிட்டார். இதனால், லதா ரஜினிகாந்த் – சௌந்தர்யாவுக்கு எதிராக பெங்களூரு போலீசில் ஆட் பீரோ நிறுவனம் புகார் அளித்தது.

இது தொடர்பான வழக்கு பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்று, கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தது.

இதனையடுத்து, ஆட் பீரோ நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று (பிப்ரவரி 20ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.

ஆட் பீரோ நிறுவன்ம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், லதா ரஜினிகாந்த் தங்களுக்கு தர வேண்டிய தொகை ரூ.14.90 கோடி என்றும், இதுவரை ரூ.8.70 கோடி தரப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள தொகை ரூ.6.20 கோடியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் அப்பாவி அனிதாக்களுக்கு எதிராக ஆஜரானவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம், லதா ரஜினிகாந்த் சார்பில் ஆஜராகி, “இந்த பண பரிமாற்றத்தில் லதா ரஜினிகாந்த் தங்களது நிறுவனம் சார்பில் உத்தரவாதம் மட்டுமே கொடுத்துள்ளார்” என வாதிட்டார்.

உடனே நீதிபதிகள், “பணம் தர வேண்டிய ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் லதா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ளார். இந்த நிறுவனத்தின் இயக்குனர் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாமல், பரிமாற்றத்தில் உத்தரவாதம் அளித்தவராகவும் அவர் இருக்கிறார்” என்பதை சுட்டிக்காட்டினார்கள். “எனவே, ஆட் பீரோ நிறுவனத்துக்கு மீடியா ஒன் நிறுவனம் ரூ.6.2 கோடியை வட்டியுடன் சேர்த்து 12 வாரங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மீடியா ஒன் நிறுவனம் அதற்குள் செலுத்தாவிட்டால், லதா ரஜினிகாந்த் அந்த பணத்தை செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்கள்.

என்ன இது…! மோசடி பேர்வழிகளுக்கு உச்ச நீதிமன்றம் இப்படியா கிடுக்கிப்பிடி போடுவது…! சிஸ்டம் சரி இல்லே…!