ஜூலை 19ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்?

வரும் ஜூலை 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை அதிக அளவில் நிராகரித்து சாதனை படைத்தவருமான தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதனால், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வரும் ஜூலை 19ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது..

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜூன் 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிடுவார் என கூறப்படுகிறது.