தமிழீழத்தில் மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிப்பு!

சுதந்திர தமிழீழத்திற்காக நடைபெற்ற இறுதிப்போரில், 2009ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள பவுத்த பேரினவாத ராணுவம் இனப்படுகொலை செய்து கொன்று குவித்தது.

இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளின் நேர்முக மற்றும் மறைமுக ஆதரவுடன் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த தமிழினப் படுகொலையை நினைவு கூரும் வகையில், தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் தமிழீழப் பகுதிகளில் வரும் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.

மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே, இறுதிப் போரின்போது காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 75-வது நாளாக நீடித்தது.