கன்னடர்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தாரா? மன்னிப்பு கேட்டாரா?

மன்னிப்பு என்பது ஐந்தெழுத்து வார்த்தை. வருத்தம் என்பதும் ஐந்தெழுத்துதான். ஆனால் இரண்டும் ஒன்று கிடையாது. வெவ்வேறு அர்த்தங்கள். தமிழ்மொழியின் சிறப்பு அது.

ஆங்கிலம் போல் ஒரே அர்த்தம் த்வனிக்கும் பல வார்த்தைகளை தமிழ் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் தனக்கென கறாரான ஓரர்த்தத்தை கொண்டிருக்கும். வேறு வார்த்தைகளுக்கு தன் அர்த்தத்தை விட்டு கொடுப்பதில்லை. அத்தன்மையை சுயமரியாதை என்று சொல்வார்கள்.

ஆகவே புரிந்து கொள்ளுங்கள். சத்யராஜ் தெரிவித்தது மன்னிப்பு அல்ல; வருத்தம்!

RAJASANGEETHAN JOHN

# # #

Even in English there is regret and apology. Sathyaraj has tendered regret only. Not apology. It is stupid reporting.
GOPALAKRISHNAN SANKARANARAYANAN
# # #
அவர் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றது, மன்னித்துவிடுங்கள் என்ற பொருளில் அல்ல… அட முட்டாள் பயலுங்களே, நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீங்களா என்ற அர்த்தத்தில்.
MUTHAZHAGAN KALIYAPERUMAL
# # #