“வடிவேலுவின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்!” –ஜி.வி.பிரகாஷ்

‘தில்லுக்கு துட்டு’ வெற்றிப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷூம், வடிவேலும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

வடிவேலுவுடன் இணைந்து நடிப்பது பற்றி ஜீ.வி.பிரகாஷ் கூறுகையில், “என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பைத் தட்டி எழுப்பும்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்பாலா கூறும்பொழுதே, வடிவேலு சார் மட்டும் தான்  இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பதை நானும், தயாரிப்பாளர் ஸ்டீபனும் முடிவு செய்துவிட்டோம். நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு சாரோடு நாங்கள் கைக்கோர்த்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது” என்றார்.

Read previous post:
0a1a
10 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’

இயக்குனர் எம்.எஸ்.செல்வா. நேற்று (21.10.2016 அன்று) ஒரு உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து சாதனை

Close