மோடியின் வரி விதிப்பால் ‘யானை புகுந்த வயல்’ ஆனது நாடு!

மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை “அழகிய யானை புகுந்த வயல்” உவமை கொண்டு பாண்டியன் அறிவுடை நம்பியை   பிசிராந்தையார் பாடியது.

புறநானூற்று பாடல்:

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

உரை :-

விளைந்த வயலிலிருந்து நெல்லை கொண்டுபோய் சேமித்து வைத்துக்கொண்டு, கவளம் கவளமாக கொடுத்து வந்தால், ஒரு “மா”-வுக்கும் குறைவான நிலத்தில் விளைந்த நெல் கூட யானைக்கு பல நாள் உணவாக தர பயன்படும். ஆனால் அதே யானையை அதன் விருப்பத்திற்கு மேய்ந்து தின்ன விட்டுவிட்டால், நூறு வயலில் விளைந்த நெல்கூட அதன் பசிக்கு போதாததாகிவிடும். காரணம், யானையின் வாய்க்குள் போவதை விட  காலில் மிதிபட்டு அழிவதே அதிகமிருக்கும். இந்த உண்மையை அறிவுடைய அரசன் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களிடம் வரி வாங்குவதில் இந்த வழியையே அவன் மேற்கொள்ளவும் வேண்டும். மேற்கொண்டால் நாடு கோடி கோடியாக வருவாய் தந்து வளமும் தழைக்க செய்யும். இப்படி இல்லாமல், அரசன் அறிவுத்திறம் அற்றவனாகி, தரமற்ற தன்னுடைய சுற்றதார்கள் பேச்சை கேட்டு , மக்களை வருத்தி அன்றாடம் வரி வாங்கி பணம் சேர்க்க விரும்பினால், அவனுடைய நாடு யானை புகுந்த வயல் போலக் கெடும். அவனும் வாழமாட்டான், அவனுடைய நாடும் வாழாது – அழியும்.

*****
அன்று பிசிராந்தையார் என்ற ஒருவர் சொல்லே பாண்டியன் அறிவுடை நம்பிக்கு போதுமானதாக இருந்திருக்கும் திருந்துவதற்கு. ஆனால், இன்றோ நாட்டில் உள்ள கோடி மக்களின் குரல் போதவில்லை அரசையும், ஆள்பவர்களையும் திருத்துவதற்கு…!

ஓடிவாங்க பக்தாள்ஸ்… ஓடிவாங்க…!!

RAJ PANEER SELVAM