கோவா பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்

கோவா மாநில பாரதிய் ஜனதா கட்சி முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணம்டைந்தார். அவருக்கு வயது 63.

கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பாரிக்கர், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார் மேலும், அவர் தொடர்ந்து  தன் இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கோவா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 5ஆம் தேதி கோவா திரும்பினார்.

பாஜக எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டி சோஸாவும் இடையில் மரணமடைந்ததால் கோவாவில் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி கூறி வந்தது.

இந்நிலையில் தான் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று முதலிலும், பிறகு சில மணி நேரங்கள் சென்ற பிறகு மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்,  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. மிகவும் தன்னம்பிக்கை மிக்க மனிதரான மனோகர் பாரிக்கர் இந்நிலையில் காலமாகியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Read previous post:
0a1a
திமுக வேட்பாளர் முழு பட்டியல்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Close