‘சங்கி’ குருமூர்த்திக்கு எதிரான விமர்சனமே ஞாநியின் கடைசி  ஃபேஸ்புக் பதிவு!

மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ‘ஞாநி’ சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

அவர் உயிர் பிரிவதற்கு முன் துக்ளக் ஆசிரியரும், இம்பொட்டண்ட் புகழ் சங்கியுமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியை விமர்சனம் செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுவே அவரது கடைசி ஃபேஸ்புக் பதிவு ஆகிவிட்டது.

நேற்று (ஜனவரி 14) இரவு துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய குருமூர்த்தி கூச்ச நாச்சமின்றி பகிரங்கமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து முழங்கினார். “ரஜினி கட்சியும், பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்” என்று பிதற்றினார். “போஸ்டரில் இந்த ஓரத்தில் ரஜினி படம், அந்த ஓரத்தில் மோடி படம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றெல்லாம் உளறினார்.

குருமூர்த்தியின் இந்த பேச்சை வீடியோவில் பார்த்த ஞாநி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.”

இதுவே ஞாநியின் கடைசி ஃபேஸ்புக் பதிவு ஆகிவிட்டது.

0a1a