நடிகை மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் நடிகர் கவுதம் கார்த்திக்: சென்னையில் திருமணம் நடந்தது

0a1eநடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன்  திருமணம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். கேரளாவைச் சேர்ந்த இவர்  ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். இன்று காலை நடைபெற்ற திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.

Read previous post:
0a1a
ஆளுநரின் அலட்சியம்:  ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதி ஆனது

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் (நவ. 27)

Close