பெரியார், சே குவேரா, பிரபாகரன் – பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால்…?

ஈ.வெ.ரா. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இந்திய அடிமையாக இருந்திருந்தால், காலத்திற்கும் அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்; அவர்தான் முதலமைச்சர். ஆனால், வகுப்புவாரி உரிமை கேட்டு, அது மறுக்கப்பட்டதால் தான் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அதனால்தான் ஈ.வெ..ரா, பெரியார் ஆனார்.

கியூப விடுதலைக்குப் பின்னர், சே குவேரா அமைச்சரானார். அவர் விரும்பியிருந்தால் இறுதிவரைக்கும் பிடல் காஸ்ட்ரோவிற்கு அடுத்த இடத்தில் இருந்திருப்பார். அவர் பதவி சுகத்தை உதறித் தள்ளி, பொலிவியாவில் துப்பாக்கி ஏந்திப் போராடினார். அதனால்தான் உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களின் ஆதர்சமாய் ஆனார்.

பிரபாகரன் விரும்பியிருந்தால் இலங்கைப் பேரினவாத அரசின் அடிமை முதலமைச்சராக காலம் முழுவதும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் விடுதலையையே நாடினார். தனது குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார்.

பெரியார், சே குவேரா, பிரபாகரன் ஆகியோரின் பிறந்த நாட்களை தன்னிச்சையாக எல்லோரும் கொண்டாடுவது பதவி ஆசையினால் அல்ல, அவர்களால் எங்களைப் போன்றவர்களுக்கு எந்த நேரடி ஆதாயமும் இல்லை. ஆனாலும், அவர்களை எங்கள் நினைவில் இருத்துவோம். அவர்களைப் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.

கருணாநிதியைப் பற்றி சொல்லித் தர மாட்டீர்களா என்றால், நிச்சயம் சொல்லித் தருவோம். அவரவர்க்கான இடத்தை நாம் மறுத்தாலும், காலம் மறுக்காது அல்லவா? ஒவ்வொரு மே மாதமும் கருணாநிதி நிச்சயம் நினைவுகூரப்படுவார். அது எப்படி என்பதைத்தான் இப்போது பார்க்கிறீர்கள்.

KEETRU NANDHAN