திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மூன்று நாட்கள் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக கமல்ஹாசன் பிரசாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது.