எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

இப்படுபாதகச் செயலைக் கண்டித்து இன்று (26.05.2018) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘தமிழ்நாடு கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு’ ஏற்பாடு செய்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா, ஊடகவியலாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ‘எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்’ என்று கோரும் பதாகைகள் ஏந்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள்.

0a1b