நடிகை கடத்தல் – கலவியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு காவல் நீட்டிப்பு!

கேரள நடிகை கடத்தப்பட்டு, கலவியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பின் நீதிமன்றக் காவலை நீட்டித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 17ஆம் தேதி பிரபல கேரள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு கலவியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை கடந்த ஜூலை 24-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து, கொச்சி நீதிமன்றத்தில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read previous post:
0a1
“ஜிஎஸ்டி-யால் சினிமா வசூலில் பாதிப்பு இல்லை” என்கிறார் அபிராமி ராமநாதன்!

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமா வசூலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம்

Close