ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்: நவம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அதற்கேற்ற சிறந்த நடிப்பையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வத்திக்குச்சி’ பட இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ’டிரைவர் ஜமுனா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.