இந்தியா எங்களை நேசிக்கிறதா…?

இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்
இந்தியா எங்களை நேசிக்கிறதா?

இந்தியா அம்பானிப் பிள்ளைகளை நேசிக்கிறது
இந்தியா அதானிகளை நேசிக்கிறது

இந்தியா ரோஹித் வெமுலாவை நேசித்ததா?

இந்தியா ஒபாமாவை நேசிக்கிறது
இந்தியா கொகோ கோலாவை நேசிக்கிறது

இந்தியா கங்கை காவிரியை நேசிக்கிறதா?

இந்தியா மான்சாண்டோவை நேசிக்கிறது
இந்தியா அதன் முதுகெலும்பை நேசிக்கிறதா?

இந்தியா ஒரு டீ மாஸ்டரை நேசித்தது
இந்தியா மாட்டுக்கறி உண்பவனை நேசிக்கிறதா?

So..
தேசியகீதம் பாடும்போது கொசு அடித்தாலோ
தேசியக்கொடியைத் தலைகீழாகக் குத்தினாலோ

இந்தியாவே..
என்னைப் பொறுத்துக்கொள்!

– கரிகாலன்

 

Read previous post:
0a6d
அனேகமாக இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும்…!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பாரத மாதாவின் பாதங்களில் இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்! # ஒரு வல்லரசு லவ்வர் டயோட்டா கார் வைத்திருக்கிறார் சாம்சங் மொபைல் வைத்திருக்கிறார் சோனி

Close