தி.மு.க செயல் தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சூழலில், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். கட்சித் தலைவரான கருணாநிதிக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தரப்பட்டது.

தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஸ்டாலின், “தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  சூழல்தான் என்னை செயல்தலைவராக ஆக்கியுள்ளது” என்றார்.

 

Read previous post:
0a1a
தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல்

Close