இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் திருமண வரவேற்பில் நடனமாடிய பிரபலங்கள்!

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் டாக்டர் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 15-04-2024,  திங்கட்கிழமை மாலை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் நடனமாடினர்.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பிரபலங்கள் வருமாறு:-

சிரஞ்சீவி, ராம்சரண் – உபாசனா காமினேனி கோனிடெலா, ரன்வீர் சிங், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மோகன்லால், விஜய் ஆண்டனி, உபேந்திரா, எஸ்.ஜே.சூர்யா, ராகவேந்திரா லாரன்ஸ், அருண் விஜய், கவுண்டமணி, சூரி, கௌதம் கார்த்திக், ராமராஜன், மோகன், பாபி சிம்ஹா, பார்த்திபன், பிரசன்னா – சினேகா, சிபிராஜ், வைபவ், ஆதி – நிக்கி கல்ராணி, சதீஷ், ஸ்ரீகாந்த் (தெலுங்கு), வசந்த் ரவி, ராஜேஷ், கருணாகரன், சார்லி, தம்பி ராமையா, மணிகண்டன் (பாய்ஸ்), சாம்ஸ், அஜய் ரத்னம், சுதன்சு பாண்டே, ரவிகிருஷ்ணா, பாண்டியராஜன், ரோபோ சங்கர்,

ஷாலினி, காஜல் அகர்வால், கல்யாணி பிரியதர்ஷன், ராகுல் பிரீத் சிங், கிரீத்திஷெட்டி, ஸ்ருதிஹாசன், ஜான்வி கபூர், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், ஆண்ட்ரியா, அதிதி பாலன், ஜனனி, வேதிகா, கஸ்தூரி, அனுஷ்யா, வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா சந்திர சேகர், எஸ்.பி.முத்துராமன், பாலா, டி.ராஜேந்தர், விக்ரமன், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி – பிரீத்தா ஹரி, மோகன்ராஜா, வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், நெல்சன், கிருத்திகா உதயநிதி, விஜய், கார்த்திக் சுப்பராஜ், ஹெச்.வினோத், வசந்த் சாய், சரண், சசி, சீனு ராமசாமி, தியாகராஜன், சிம்புதேவன், பாலாஜி சக்திவேல், பாலாஜி தரணிதரன், சித்ரா லட்சுமணன்,

எம்.செண்பகமூர்த்தி, ஜி.கே.எம்.தமிழ்குமரன், தில் ராஜு, கலைப்புலி எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், போனி கபூர், முரளி – ஹேமா ருக்மணி, ஏ.எம்.ரத்னம், கருணாமூர்த்தி, தனய்யா, தனஞ்செயன், ராஜசேகர், மாதேஷ், செம்பியன்,

ஏஆர்.ரஹ்மான், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சிவமணி, சந்தோஷ் சிவன், ரவிவர்மன், ராம்ஜி, ரத்னவேலு, திரு, கோபிநாத், திருமதி கே.வி.ஆனந்த், தோட்டா தரணி, முத்துராஜ், வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக், விவேகா, ஷோபி – லலிதா ஷோபி, பிளாஸி, சுஜாதா, ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, டிஜிபி.சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரி உள்ளிட்ட பலர் இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லி, வசந்த பாலன், அறிவழகன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை, Executive Producer சுந்தர்ராஜ், விமல், கல்யாணம், PRO சதிஷ் (Team AIM)  ஆகியோர் வரவேற்றனர்.