பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்”: ‘தாதா 87’ படத்தின் புரொமோ பாடல்! 

‘கலை சினிமாஸ்’ தயாரிப்பில், சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் மற்றும் பலர் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தாதா 87’.

இப்படத்தின் டீசர் வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக, “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” என்ற தலைப்பில் ‘தாதா 87’ படத்தில் ஒரு அசத்தலான புரொமோஷன் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். நடிகர் ஐனகராஜின் மகன் நவின் ஐனகராஜ் இப்பாடலை பாடியுள்ளார். லியாண்டா் லீ இசையில் உருவான இப்பாடலை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த (பிப்ரவரி) மாதம் ‘தாதா 87’ படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம்  முடிவெடுத்துள்ளது.