ரஜினி நடிக்கும் ‘தர்பார்’: அமெரிக்காவில் ஜனவரி 8ஆம் தேதி பிரிமியர் காட்சி!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் – நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ திரைப்பட்த்தின் பிரிமியர்  காட்சியை, பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகிற ஜனவரி 8ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.

வடஅமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளை இப்படம் ஆரம்பக் கட்டமாக பெற்றிருக்கிறது.

Read previous post:
0a1a
இயக்குநர் பாரதிராஜாவின் ‘குற்றப் பரம்பரை’: வெப் சீரிஸ் ஆகிறது!

கமல்ஹாசனுக்கு ஒரு ‘மருதநாயகம்’ போல, பாரதிராஜாவுக்கு ஒரு ‘குற்றப்பரம்பரை’. இருவரும் தத்தமது படம் பற்றி அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடுவார்கள். நீட்டி முழக்கி பேட்டி கொடுப்பார்கள். தொடக்க விழா

Close