ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ப்ரதீக் பப்பார் நடிக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ராம்- லட்சுமண் சண்டைப் பயிற்சிக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

 வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் ‘தர்பார்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இன்று (செப்டம்பர் 11) மாலை 6 மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

(அந்த செகண்ட் லுக் போஸ்டரை மேலே காண்க.)

 

 

Read previous post:
0a1a
ஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது

"நாமறிந்த  ஒரு பிரபல பெண் அரசியல்வாதியின் ஆளுமை, அவருடைய  குணாதிசயங்கள் மற்றும் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்தும் வகையில் குயின்’ வெப் சீரியலின்

Close