ஜெயலலிதா பற்றிய ‘குயின்’ வெப் சீரியல்: தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது

“நாமறிந்த  ஒரு பிரபல பெண் அரசியல்வாதியின் ஆளுமை, அவருடைய  குணாதிசயங்கள் மற்றும் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை  வெளிப்படுத்தும் வகையில் குயின்’ வெப் சீரியலின் கதை அமைந்துள்ளது…” என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஆம், இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரியல். ஆனால், அரசியல் ரீதியான எதிர்ப்பு மற்றும் சட்டச்சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இதில் ஜெயலலிதா பெயர் கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். இந்த சீரியலை எழுதியிருக்கிறார் ரேஷ்மா கட்டாலா. இதை கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

MX Player ல் பார்க்கக்கூடிய இந்த முன்னணி தமிழ் வெப் சீரியல், இந்தி, தெலுங்கு. பெங்காலி ஆகிய  மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.

“இந்த ’குயின்’ வெப் சீரியலை, இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான MX Player ல் கட்டணமில்லாமல் பார்க்கலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read previous post:
0a1b
அஞ்சலி, யோகிபாபு, ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

அஞ்சலி, யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் தொடங்கியது.

Close