உங்களுக்கே இது காமெடியா தெரியுதா, இல்லையா?

எல்லாம் ஓகே.

ஆனா, தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட பேராத காங்கிரஸ்காரன், கூட்டணியால திமுககாரன் ஓட்டையெல்லாம் லபக்கிட்டு 41 தொகுதியில் கை சின்னம் வாங்கிய 26 லட்சம் ஓட்டையும் தன்னோட சொந்த முயற்சியில் கட்சியை வளர்த்து தக்கவைத்து அதன்மூலம் “26 லட்சம் = 6% ஓட்டு வங்கி” அப்படின்னு கோல்மாலா கணக்கு காட்டி பீத்தறது தான் கர்ணகொடூரமா இருக்கு.

இதை எலக்‌ஷன் கமிஷனே அதிகாரப்பூர்வமாக சொல்றது இன்னும் பெரிய கேலிக்கூத்து.

கூட்டணியில் ஒரு கட்சியின் சரியான பங்களிப்பை கணிக்க அறிவியல்பூர்வமாக எந்த வழிமுறையும் இல்லாதது இந்த மாதிரி பொய் பிரசாரத்துக்கு உதவுகிறது.

“வாக்கு வங்கி” என்பது ஒரு போலி பிம்பம். காங்கிரஸ் இதே திமுக கூட்டணியில் 117 சீட்டில் நிற்க நேர்ந்து, இதே நிலையில் முடிவுகள் வெளியாகியிருந்தால், அவர்கள் 19% வாக்குவங்கி உள்ளவர்கள் என புள்ளிவிவரம் வெளியாகியிருக்கும். அப்போது ஓட்டு ஓட்டென ஓட்டியிருப்போம். முகத்திரையும் கிழிந்திருக்கும். வெறும் ஒற்றை இலக்கத்தில் 6% என்று சொல்வதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறோம். அதுவே இவர்களை போன்ற ஓட்டாண்டிகளுக்கு நல்லதாகிவிடுகிறது.

6% வாக்கு வங்கி. அப்படின்னா தமிழகத்தில் வாக்களிக்கும் ஒவ்வொரு 17 பேரில் ஒருவன் காங்கிரஸ்காரனா?

உங்களுக்கே இது காமெடியா தெரியுதா, இல்லையா?

 – கார்த்திக் ரங்கராஜன்