எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய கலைஞர்களுக்கு திரைப்பட பிஆர்ஓ சங்க விழாவில் விருது!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளர்கள் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆர்.ஓ. தொழிலை (1958 ‘நாடோடி மன்னன்’) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆர்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்த 25 ஆண்டுகள் விழா – இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக சென்னை  கலைவாணர் அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கலைஞருக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆர்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கர்ராவ், ஆரூர்தாஸ், சொர்ணம், காஸ்ட்யூமர் முத்து, எடிட்டர் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம். ஆர்.ஆர்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில், எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், பெப்ஸி தலைவர் ஆர்கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பிலிம் சேம்பர் தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு தலைவர் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆர்.பார்த்திபன், நடிகர் விஜயகுமார், எஸ்.வி.சேகர், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குனர் சுந்தரம், ருக்மாங்கதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் (சங்கர்) கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் மட்டும் பாடப்பட்டன.

விழாவிற்கு வந்தவர்களை திரைப்பட பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் டைமண்ட்பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி ஆகியோர் தலைமையில் அனைத்து திரைப்பட பி.ஆர்.ஓக்களும் வரவேற்றார்கள்.

p2