நட்சத்திர பேட்மிண்டன் போட்டி: சென்னை அணியின் நடிகர் – நடிகைகள் அறிமுகம்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து  நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெற இருக்கிறது. ‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடக்க இருக்கும் இந்த போட்டிகள் சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது.

இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா, சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. ‘சென்னை ராக்கர்ஸ்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சென்னை அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர்கள் பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், நடிகைகள் காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த அணியின் விளம்பர தூதராக நடிகர் மாதவன் பொறுப்பேற்றுள்ளார். மேலும், அணியின் ஊக்குவிப்பாளராக அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘சென்னை ராக்கர்ஸ்’ அணியினரை நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டியின் தலைவரும், நிறுவனருமான ஹேமச்சந்திரன், ‘சென்னை ராக்கர்ஸ்’ அணியின் உரிமையாளர் சி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோரும் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டார்கள்.

0a1n