‘சார்லி’ தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன்!

‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.

2015ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற நிறுவனம் தயாரித்தது.

மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையை, இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் கைப்பற்றியது. துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தற்போது துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஜய் தற்போது இயக்கி வரும் ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்தை முடித்துவிட்டு ‘சார்லி’ ரீமேக்கை இயக்குவார் விஜய். நவம்பர் 15ஆம் தேதி படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Read previous post:
0a3j
சே குவேரா பிறந்தநாள்: கியூபா மக்களிடமிருந்து பாடம் கற்போம்!

“எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்று சொன்னவன் சே குவேரா. அவ்விதமே வாழ்ந்தவன் சே குவேரா. எல்லைகளைக் கடந்தவன். அதனால் காலத்தை வென்றவன்.

Close