செந்தில் கணேஷ் –  ராஜலட்சுமி பாட்டுக்கு பிரபுதேவா – நிக்கி கல்ராணி நடனம்!

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா தயாரித்துவரும் ‘பார்ட்டி’ படம் விரைவில் வெளிவர உள்ளது. இதை தொடர்ந்து இந்நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’.

இந்த படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம், ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.  முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க, கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –   செளந்தர்ராஜன்

 இசை  –    அம்ரீஷ்

பாடல்கள்  –    மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம், கருணாகரன்

எடிட்டிங்  –   சசி

 கலை  –   விஜய்முருகன்

நடனம்    –     ஜானி ஸ்ரீதர்

ஸ்டண்ட  –    கனல் கண்ணன்

தயாரிப்பு நிர்வாகம்  –  மகேந்திரன்

தயாரிப்பு மேற்பார்வை   –    பரஞ்சோதி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.

‘சார்லி சாப்ளின் 2’ படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், “இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி முதன்முறையாக சினிமாவில் பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான்… சின்ன புள்ள செவத்த புள்ள… ” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகரம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான இப்பாடலை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன்முதலாக பாடியது இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா – நிக்கி கல்ராணி ஜோடி நடனம் ஆடியது. இந்த ஆடல் – பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகும்” என்றார்.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

 

Read previous post:
p1
கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’

லட்சுமி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான  புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக அவர்

Close