பிக்பாஸ்: தனக்கு வாக்களித்தவர்களின் முடிவை ஓவியா நியாயப்படுத்தி இருக்கிறார்!

பிக்பாஸ் யாருக்கு எந்த வகையில் லாபமோ அல்லது நட்டமோ தெரியாது.. ஆனால் ஓவியாவுக்கு திரையுலகில் ஒரு மறுவாழ்வை அளித்திருக்கிறது பிக்பாஸ்.

நேர்மையான, புறம் பேசாத, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற, வீண் வம்புகள் பேசாத, ஆனால் அப்படி பேசுபவர்களிடம் இருந்து தனித்திருக்கிற, அதே நேரத்தில் தன் மீது தாக்குதல் நடத்துபவர் யாராக இருந்தாலும் அவரை நேருக்கு நேராக சந்திக்கிற துணிச்சல் மிக்க ஒருவருக்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

காயத்ரியிடம் எல்லோருமே ஓர் எஜமான விசுவாசத்தோடு நடந்து கொள்கிறார்கள் – ஓவியாவைத் தவிர. நேற்று ஓவியா காயத்ரியை எல்லோருக்கும் மத்தியில் வைத்து, “காயத்ரி நடிக்கிறார்” என்று சொன்னபோது அனைவரும் வாயடைத்து உட்கார்ந்திருந்தனர். அதே நேரத்தில் ஆர்பபாட்ட அதிகாரம் செய்து வந்த காயத்ரி, ஓவியாவிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை உருவானது.

ஓவியா முன்னேறுகிறார். இனி அவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் உருவாகலாம். முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

தனக்கு வாக்களித்தவர்களின் முடிவை ஓவியா நியாயப்படுத்தி இருக்கிறார்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

Ma Tholkappiyan

Read previous post:
0a1
“பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் டேக்ஓவர் செய்து கொண்டார்! கமல்டா…!!”

கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பொருந்தாமல் கொஞ்சம் திணறினார். கமலை ஒரு உயர்தளத்தில் வைத்து பார்த்துவிட்டு டிடி போல பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதுவும் வணக்கம்

Close