ஜூலிக்கு வயிற்று வலி வந்தது இல்லியா.. அது டிப்பிகல் ஹிஸ்டீரியா!

ஜூலிக்கு வயிற்று வலி வந்தது இல்லியா? அது டிப்பிகல் ஹிஸ்டீரியா. ஒரு வகையான மன பிரச்சனை. ஏன், மன நோய்ன்னு சொல்லலைன்னா நம்ம எல்லோருக்குமே வரக்கூடிய மிக சாதாரண மனக்குறை இது… ரொம்ப ஜாலியான மூளை விளையாட்டு…!

ஜூலி கீழ விழுந்தது ஒரு சாதாரண மேட்டர். யாராவது இரண்டு பேர் தூக்கி விட்டுட்டு ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தா மேட்டர் அப்போவே முடிஞ்சிருக்கும். ஒருத்தனும் கண்டுக்காம கபடி விளையாட போய்ட்டாய்ங்க. அதோட, வேற எதுக்கோ வேற திட்டிட்டாய்ங்க. ஏற்கனவே அந்த வீட்ல தனக்கு முக்கியத்துவம் இல்லேன்னு செம்ம கடுப்பு அதுக்கு. ஆனா, அதை வெளிக்காட்டக்கூடிய ஆளுமை இல்லை. So, எல்லோருக்கும் நல்ல பிள்ளையா நடந்து முக்கியத்துவத்தை பெற முயற்சி செய்தது. ஆனால், அது எந்த பக்கம் போனாலும் காயத்ரி வெளுப்பதால் அடக்கி வச்சிருந்த “கவன ஈர்ப்பு ஏக்கம்”, ‘ வயிறு வலிக்குது, என்னை பாத்துக்கோங்க’ன்னு ட்ராமா போட வச்சது.

நான் ட்ராமான்னு சொன்னாலும் அது ஜூலி வேணும்ன்னு செய்தது இல்லை. ஆழ்மன கொந்தளிப்புக்கு அவங்களை அறியாமல் அப்படி ரியாக்ட் செய்வது. உயிர் போகப் போவதாக நினைத்தது, வயிறு வலித்தது எதுவும் பொய் இல்லை. ஆனால் அதில் உண்மையும் இல்லை. சாமி ஆடுபவர்களுக்கு 10 நிமிஷம் மட்டும் வரும் தன்னை மறந்த ஒரு கிளர்ச்சி நிலை இது. ஒரு சூழ்நிலைக்கு தன்னை பொருத்திக்கொள்ள ஒரு நபரின் மூளை படும் அரும்பாடு அது. பாவம்.

நிற்க, மாமியார், கணவன், நாத்தனார் என எல்லோரும் ஒன்று சேர்ந்து கொத்தும்போது பல பெண்களுக்கு இது நேர்வதை பார்க்கலாம். கை கால்களை சுருட்டிக்கொண்டு மயக்கமடைதல், வலிப்பு வந்ததைப் போல எதிர்வினை செய்தல், ஆஸ்துமா நோயாளி போல மூச்சிரைப்பது ஆகியவை பெண்கள் மத்தியில் அதிகம் காணும் ஹிஸ்டீரியா அறிகுறிகள்.. சூழ்நிலை மற்றும் நோயாளியின் செயல்பாடுகளை வைத்து அது மனக்குறை தான் என தெரிந்துகொள்ளும் மருத்துவர்கள், மயக்கத்தில் இருந்து விடுவிக்க ஆதரவாக பேசி, பின் வெறும் சத்து மருந்தை ஊசியில் ஏற்றினால் எழுந்து கொள்வார்கள்.

கிராமங்களில் நாட்டு மருத்துவர்கள் மிளகாயை சுட்டு, அந்த புகையை நுகர வைப்பார்கள். நெடி தாளாமல் தும்மலுடன் எழுவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை காலேஜ் ராகிங்கில் ஒரு பையன் அதேபோல மயக்கமடைய, நாங்கள் அனைவரும் அரண்டு போனோம். அந்த நேரம் அங்கே வந்த சீனியர் மாணவன், மயக்கமடைந்தவனை செக் செய்துவிட்டு, ஒரு நொடியில் எழுப்பி விட்டான்… என்ன செய்தான் தெரியுமா?

ஸ்டைலாக ஒரு சிகரெட்டை பிடித்துவிட்டு, அந்த தீ கங்கினை படுத்திருந்தவன் பட்டக்ஸில் வைத்தான். துள்ளி எழுந்தவனை ஒரு அறை… “மவனே யார்ட்ட நடிக்கிற…” என்று!

நல்ல காலம், அப்படி விசயம் தெரிந்தவன் பிக் பாஸ் வீட்டில் இல்லாதது! இல்லேன்னா ஜூலி கதி… ஐயகோ…!

SARAV URS