பாவம், பிக்பாஸே ஓவியா போன சோகத்துல இருக்காரு போல…!

பிக்பாஸ்: 09.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

MARAM R:

இன்னைக்குமாடா துணி தொவைக்கிற டாஸ்க் கொடுத்திருக்கீங்க… பாவம், பிக்பாசே ஓவியா போன சோகத்துல இருக்காரு போல… எல்லாரையும் நல்லா வெச்சு செய்றாப்ல…

நைசா கணேஷ்கிட்ட எல்லாரும் முட்டை பஞ்சாயத்த ஆரம்பிச்சு பாத்தானுங்க… அந்தாளு கேசுவலா, ‘சூப்பர் சூப்பர்’னு சொல்லிட்டு போய்ட்டார்… இதுக்கு மேலயும் கணேஷ்கிட்ட பிரச்சன பண்ணீங்கன்னா, அப்புறம் கணேஷ் நாமக்கல் ஆர்மி சும்மா இருக்காது ஆமா…

# # # # #

காசி விஸ்வநாதன் (ஒளிப்பதிவாளர்):

ஓவியா அவசரப்பட்டு வெளிய போயிட்டார்…

நாம கோவப்பட்டு ஜூலிய அனுப்பிட்டோம்…

பிக்பாஸ் இயக்குனர் புத்திகெட்டு, பிந்துமாதவிய கொண்டு வந்திட்டார்…

இதனால் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ்… மொக்கை…!

#

மிஸ்டர் வையாபூரி…

நீங்க ஜெயிக்கிறதுக்கு எங்கள மாதிரி எத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் வெயில், மழை, காடு, மேடு பார்க்காமல் உழைத்திருப்போம்…

உங்களுக்கு ஒருநாள் வெயிலில் துணி துவைக்கிறதுக்கு வலிக்குது…

இப்பையாவது அந்த உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், கேமரா அஸிஸ்டண்ட்ஸ், லைட் ஆபீசர்ஸ், கிரேன் ஆபிசர்ஸ், செட் அசிஸ்டண்ட்ஸ், புரொடக்சன் ஆபிசர்ஸ் (உணவு உபசரிப்பு) போன்ற பல பேரோட கஷ்டத்த நினைச்சுப் பாருங்க.

#

சினிமாவுல மேல் டாமினேட்டிங்காம்; அதனால தான் இந்த அம்மா (காயத்ரி) கெட்ட வார்த்தை பேசுறாங்களாம்…

நாளைக்கு எபிசோடு டெலிகாஸ்ட் ஆகட்டும்… உனக்கு இருக்கு…!

# # # # #

0a1

JAYASHREE GOVINDARAJAN:

பிக்பாஸ், வேண்டுமான அளவு ரூம்போட்டு யோசித்து, டீம்களைப் பிரித்து, ரூல்களைக் கடுமையாக்கி, சண்டை மூண்டே தீரும் என்று நினைத்து கொடுத்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்…

சக்தி – காயத்ரி அணி ஈடுகொடுக்க முடியாமல் “அவங்களுக்கே எல்லா லக்ஸரி ஐட்டமும் கொடுத்துடுங்க பிக்பாஸ்” என்று விரக்தியுடன் விட்டுக்கொடுக்கும் அளவில் சப்பென்றானதுக்குக் காரணம், முதல்முறை தங்கள் பெயர் நாமினேஷனில் வந்துவிட்டதில் மனதளவில் தளர்ந்துபோயிருப்பதால் மட்டுமே இருக்கமுடியும்…

அடுத்தவர்களைத் தூண்டிவிட்டு பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி, சண்டைபோட வைத்து, அவர்களையே நாமினேட் செய்தபோது, அப்படித்தானே அவர்களுக்கும் இத்தனை நாள் இருந்திருக்கும்..!

#

எட்டு, பத்து துணி்களை 3 பேர் சேர்ந்து துவைச்சு அயர்ன் பண்ணவே இந்தப் பாடா…? இந்தக் கதறலா…?

சக்தியை வேலை செய்யவிட்டு, வையாபுரியை க்வாலிட்டி கண்ட்ரோலர் ஆக்கி இருக்கலாம்.

ஒருநாள் பிந்து மாதிரி, ஒருநாள் ரைசாவை க்வாலிட்டி கண்ட்ரோலர் ஆக்கி ஓய்வு கொடுத்திருக்கலாம்.

#

ஆரவ் அளவுக்கதிகமான விடுதலையுணர்வுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருப்பதை ஓவியா பார்த்துவிடக் கூடுமோ என்று பதைப்பாக இருக்கிறது.

அப்படிப் பார்க்க நேர்ந்து, ‘வெளியே’ வந்துவிட்டால்… மகிழ்ச்சி…!

#

பிக்பாஸ் வீட்டில், மூவரின் ‘நள்ளிரவுப் பேய் விளையாட்டு’ போலவே அந்த நிகழ்ச்சியும் பிசுபிசுத்துப் போகிறது.

முன்பைப் போல சனி போற்றுதும், ஞாயிறு போற்றுதும் மனநிலை வந்துவிட்டது…!

#

இந்த வாரம் சக்தியைத் தூக்கிவிட்டு, காயத்ரியைத் தனியாளாக்கிப் பார்க்க வேண்டும் என்று பாதி வாரத்தில் சிலர் ஆட்டையைக் கலைக்கிறார்கள்…

பள்ளமிருக்குமிடமெல்லாம் பாயும் வெள்ளம்… வெற்றிடமிருக்குமிடமெல்லாம் பரவும் வாயு…

‘கவிஞர்’  சினேகன் இருக்கும் வரை இந்த உலகில் யாருமே தனியாளாக முடியாது…

எனவே, போட்டு வைத்தத் திட்டப்படி வேலையைப் பாருங்கள்…

#

MICHAEL ARUN:

பிக்பாஸ், கமல் சார்… வார இறுதி நாளுல பேசறதுக்காகவாவது ஏதாவது க்ரியேட்டிவா பண்ணுங்க, ப்ளீஜ்…!.

புதன்கிழமையானா எல்லாரும் சேர்ந்து ஷக்தி – காயத்ரி தலைமையில ஒருத்தர கார்னர் செய்றது… (பிக்பாஸ், பிக்பாஸ் பேட்டர்ன மாத்துங்க பாஸ், போரடிக்குது…)

போன வாரம் மட்டும் தான் வித்தியாசம்… ஒருவர் சிங்கிளா நின்னு எல்லாரையும் கார்னர் செய்து தூங்கவிடாம ஓட விட்டது….

# # # ##