பிக்பாஸ்: ஓவியா வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைத்தது ‘ஓவியா புரட்சி படை’!
விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ. ‘பிக்பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கிறது. அவர்கள் ‘ஓவியா புரட்சி படை’ என்ற பெயரில் ஓர் அணி அமைத்து, ஓவியா எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டால், உடனே பாய்ந்தோடி வந்து, ஓவியாவுக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் அளித்து, ஓவியாவை காப்பாற்றி விடுகிறார்கள்.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெற்றி பெற வாழ்த்துச் சொல்லி ஆங்காங்கே பேனர் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம் ‘ஓவியா புரட்சி படை’ சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் –
“நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே…
ஆர்த்தியை அலறவிட்ட ஆளுமையே…
காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே…
பரணிக்கு ‘பாய்’ சொன்ன பாசமே…
தங்க தலைவியே ஓவியா…
Bigg Boss Title
வெற்றிபெற வாழ்த்துக்கள்…” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஓவியாவின் ஆதரவாளர்கள் கொஞ்சம் ஓவராகத் தான் போகிறார்களோ…?