”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது!”

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்:

1.கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மக்கள் நீதி மய்யத்தில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வார்கள்

2.பாட்டாளி மக்கள் கட்சியை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்

3.இபிஎஸ் – ஓபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் கட்டுப்பாட்டிலிருந்து அதிமுக விடுபடும். ஆனால் அது மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்

4.தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா? எனத் தெளிவாக அணிபிரியும்

தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.

தோழர்களே!

சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்.

ரவிகுமார், விழுப்புரம் எம்.பி.

 

 

Read previous post:
0a1b
பத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்!

செய்திகள் போன்ற தோற்றத்தில் வரும் விளம்பரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒவ்வாமை உண்டு. அடிப்படையில் அது ஒரு கீழ்த்தரமான ஏமாற்று வேலை. கடைசியில் பொடியாக விளம்பரம் என்று

Close