“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்!”

அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்ஹாசன். இது உங்கள் சினிமா போஸ்டர் அல்ல.

அலுவலகத்தில் ethnic wear கொண்டாட்டங்களின்போது விடலைச் சிறுவர்கள் முதல்முறை வேட்டி கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அறுபத்தி சொச்சம் வயதில் கொஞ்சம்கூட லஜ்ஜையே இல்லாமல் அரசியல் மேடையில் மீசையை முறுக்குகிற உங்களுக்கு inclusivity என்ற வார்த்தையின்—அர்த்தத்தை விடுங்கள்—spelling ஆவது தெரியுமா?

பிக்பாஸ் போன்ற ஒரு பெரிய தளத்தில் மகாபாரதத்தைப் போய் இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு என்று கூறி ஜெயமோகனின் நூலைப் பரிந்துரைத்த உங்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்புவது –

நூல் கூட அல்ல, வெறும் தலைப்பு தான் — ஆதவன் எழுதிய ”மீசை என்பது வெறும் மயிர்.”

Sundar Shalinivas

 

Read previous post:
0a1a
”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது!”

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்: 1.கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மக்கள் நீதி மய்யத்தில் தற்காலிக தஞ்சம்

Close