தமிழகத்தின் செல்லக் குரலுக்கான ஒரு தேடல்: சசிகலா vs தீபா!

KARTHIKEYAN PANDIAN: தீபா, பாண்டேவுடன் பேசியதில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன…

அவை கீழே:

”அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்… கோழி கொக்கரக்கோனு கூவுச்சு….”

அடேய்… இதைதான் ஒளிபரப்பச் சொல்லி கத்திட்டு இருந்தோமோ…?

# # #

ரா.ராஜகோபாலன்: “உங்களுக்கும், உங்க அத்தைக்கும் என்ன பிரச்சினை?”

“நான் அனுமதிக்கபபடவில்லை….”

“ஏன் பன்னிரண்டு வருடமாக உங்கள் அத்தை உங்களை தொடர்பு கொள்ளவில்லை? என்ன பிரச்சினை?”

“நான் அனுமதிக்கபபடவில்லை…”

“சசசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் உங்கள் அத்தையுடன் இல்லாத அந்த சில மாதங்களில்கூட ஏன் உங்களால் அத்தையுடன் நெருங்க முடியவில்லை? அப்படி என்ன கோபம் உங்கள் அத்தைக்கு?”

“நான் அனுமதிக்கபபடவில்லை….”

“உங்களுடன் பிறந்த தீபக், இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் நெருங்கி இருந்திருக்கிறார். சசி அத்தை… சசி அத்தை… என்று நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். தீபாவிடம் மட்டும் என்ன பிரச்சினை?”

“நான் அனுமதிக்கபபடவில்லை… “

—–

முடியல…. அர்னாப்-க்கு ராகுல் காந்தி கொடுத்த “women empowerment” இன்டர்வியூ போல….

திரும்பத் திரும்ப பேசுற நீ…. திரும்பத் திரும்ப பேசுற நீ… திரும்பத் திரும்ப பேசுற நீ…

# # #

KARTHIK  RANGARAJAN: நாம ரெண்டு பேர் தான் இந்த மாதிரி ஃபீல் பண்றோம். உபிஸ் ரரஸ் “ஜெ குரல் மாதிரியே இருக்கு”ன்னு பயங்கர ஃபீலிங்.

# # #

SURESH KANNAN: இந்தக் கூத்துகளின் இடையே, ‘சசிகலாவின் குரல் எப்படியிருக்கும்?’ என்று கேட்க ஒரு கும்பல் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் செல்லக் குரலுக்கான ஒரு தேடல். சூப்பர் சிங்கர் அரசியல்.

# # #

KAPPI VT: பதவி ஆசை யார உட்டுச்சு…? அரசியல்ல அ, ஆ கூட தெரியாததெல்லாம் முதல்வராக ஆசைப்படுது…! எல்லாம் தமிழ் நாட்டோட தலை எழுத்து…!