அதிமுக முதல் பட்டியல்: 6 வேட்பாளர்கள் விவரம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – போடிநாயக்கனூர், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – எடப்பாடி, அமைச்சர் டி.ஜெயக்குமார் – ராயபுரம், அமைச்சர் சி.வி.சண்முகம் – விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் – ஸ்ரீவைகுண்டம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இணைசெயலாளர் எஸ்.தேன்மொழி- நிலக்கோட்டை (தனி) ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read previous post:
0a1a
பழனிசாமியின் பிரம்மாஸ்திரம்: மேல்தட்டில் கட்சிகளுடன் கூட்டணி, கீழ்த்தட்டில் சாதிகளுடன் கூட்டணி

தேர்தல் கூட்டணிகளை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நிறையப் பேர் திமுக கூட்டணி பலமாக இருப்பதான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கலாம். அதிமுக சளைத்தது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இன்னொரு

Close