“நான்  நடிக்க இருப்பதாக வெளியான செய்தி – வதந்தி”: திவ்யா சத்யராஜ் அறிக்கை

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான  செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிக்கப் போவதாக ஒரு காலை நாளிதழில் வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். திரைத்துறை மீது எனக்கு  அபரிதமான  மரியாதை உண்டு.  நான் nutrition Dietics  துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன்.

நான் நடிக்கப் போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் அப்பாவை (சத்யராஜை) வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை” எனறு கூறியுள்ளார்.