செல்போனால் ஏற்படும் விபரீத சங்கடங்களை சித்தரிக்கும் படம் ‘88’

ஏ.ஜெயக்குமார் வழங்க, ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘88’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஜி.எம்.குமார், பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் நடிக்கிறார்கள். ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன். படம் பற்றி இயக்குனர் மதன் கூறுகையில், “இன்று விஞ்ஞானம் ரெக்கை கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ, அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..

அதிலும், பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேசக் கூடாது என்பது தான் இந்த படத்தின் ஹைலைட் கதை. இதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம். சென்னை, ஆந்திரா, ஊட்டி போன்ற  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஜுலை மாதம் 14 ம் தேதி படம் வெளியாகிறது” என்றார்.

ஒளிப்பதிவு – வெற்றிமாறன்

இசை – தயாரத்னம்

கலை – ஆரோக்கியராஜ்

பாடல்கள் – அறிவுமதி, மதன்கார்க்கி

நடனம் – காதல் கந்தாஸ்

எடிட்டிங் – அவினாஷ்

ஸ்டண்ட் – சக்தி சரவணன்

தயாரிப்பு மேற்பார்வை – ராம் பூபால்

இணை தயாரிப்பு – வினோத்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி