கொலைகார ஆரியத்துவ பயங்கர வாதிகளை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம்!

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய ஆரியத்துவ அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்- 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆரியத்துவ ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பசு வதைக்கு எதிராக கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் “மத்தியில் ஆளும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆரியத்துவ கோட்பாட்டை நாடு முழுவதும் மக்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது, இஸ்லாமியர்கள் மற்றும் தலித் பிரிவினர் இலக்காக்கப்படுகின்றனர்” என கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் டெல்லி-மதுரா பயணிகள் ரெயிலில் கடந்த வியாழனன்று 3 முஸ்லிம் சகோதரர்களை 20-25 பேர் கொண்ட ஆரியத்துவ பயங்கரவாத கும்பல் ஒன்று தாக்கியதில் ஜுனைத் என்ற 17 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து பரிதாபாத்தில் உள்ள கந்தவாலி கிராமத்தில் ஜுனைத் குடும்பத்தினர் மட்டுமல்லாது கிராம முஸ்லிம் சமுதாயமே கறுப்புப் பட்டை அணிந்து ஈத் பண்டிகையை கண்ணீருடனும் துக்கத்துடனும் அனுசரித்தனர். அதாவது நமாஸ் மட்டும் செய்த முஸ்லிம்கள், ஈத் பண்டிகையைக் கொண்டாடவில்லை.

சிறுவன் ஜுனைத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் ஆரியத்துவ பயங்கரவாத கும்பல்கள் நடத்தும் கொலைவெறி தாக்குதல்களுக்கு எதிராக #Notinmyname (எங்களின் பெயரில் தாக்குதல்களை நடத்தாதே) என்னும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. திரைப்பட இயக்குநர் சபா தேவன் தனது ஃபேஸ்புக் பதிவில் தொடங்கி வைத்த இந்த ஹேஷ்டேகில், பலரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியா டுடே செய்தி நெறியாளரான ராஜ்தீப் சர்தேசாய், தனது ட்விட்டர் தளத்தில், ”எந்த மதத்தைச் சேர்ந்த எந்த குடிமகன் குறிவைத்து தாக்கப்பட்டாலும் அதற்கு எதிரானது இந்த பிரச்சாரம்” எனப் பதிவிட்டார்.

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதரின் ட்விட்டர் பதிவில், ”அக்லக்கிற்காக ஓங்கிய சத்தம், ஜுனைத்தின் விஷயத்தில் குறைந்த எதிரொலியாக உள்ளது. தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணையுங்கள். குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடு முழுவதும் இன்று முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆரியத்துவ பயங்கரவாதிகள் செய்யும் படுகொலைகளுக்கு எதிராக இன்று இந்தியா முழுவதும் போராட்டம் தொடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி லண்டன், கனடாவிலும் போராட்டம் நடக்கிறது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா போபால், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் Notinmyname என பாதகையை தாங்கிய வண்ணம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஷப்னா ஆஸ்மி, நந்திதா தாஸ், கொங்கனா சென் உள்ளிட்ட திரைஉலக பிரபலங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று மாட்டிறைச்சி விவகார படுகொலைக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் மூலமாக வெகுமக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

0a