நோட்டாவுக்கு கீழே உள்ள பாஜக.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக. தாராளம்!

தமிழக வாக்குவங்கி நிலவரப்படி, நோட்டாவுக்கும் கீழே இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அ.தி.மு.க. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இக்கூட்டணி குறித்து பியூஷ்கோயல் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடியை  மீண்டும் பிரதமராக்க மெகா கூட்டணி அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் அடுத்து தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.