நமக்கு வாய்த்த ஜனநாயகத்தின் 4 தூண்களும் செல்லரித்து புழுத்து துர்நாற்றம் வீசுகிறது!

நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர், அதிகாரத்தினை பி.எம்.ஒ அலுவலகத்தில் வைத்திருந்தால் தான் நாடு உருப்படும் என்று நம்புகிறார்.

நமக்கு வாய்த்திருக்கும் உச்ச நீதிமன்றம் அடிப்படை ’காமன் சென்ஸ்’ கூட இல்லாமல் நீட்டினை திணிக்க முயற்சி செய்கிறது.

நமக்கு வாய்த்திருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 40-50 ஆயிரம் சம்பளம் வாங்கி விட்டு, வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடக் கூடாது, ஐந்து மாணவர்கள் மட்டுமே மருத்துவத்திற்கு தேர்வு செய்யப்பட்டது ஆசிரியர்களுக்கு அவமானம்’ என்கிற ரீதியில் நீதிபதி ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு அரசியல் சாசன உரிமைகளை கீழே போட்டு மிதித்துவிட்டு. ‘நல்ல’ உபதேசம் எடுக்கிறார்.

நமக்கு வாய்த்திருக்கும் பெரும்பான்மையான ஊடகங்கள் அதிகார வர்க்கத்தின், வரம்பு மீறிய நீதித்துறையின், தன்மானமே இல்லாத நான்காவது தூணாய் ‘கிளிப் பேச்சு கேட்கவா’ என ஒப்பிக்கிறார்கள்.

என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை “நீங்கள்” சொல்கிறீர்கள்.

என்ன உடை உடுத்தி மக்கள் நடமாட வேண்டும் என்பதை “நீங்கள்” சொல்கிறீர்கள்.

என்ன கல்வி படித்தால் மருத்துவராவோம் என்பதை “நீங்கள்” சொல்கிறீர்கள்.

எதற்காகவெல்லாம் போராட வேண்டும், கூடாது என்பதை “நீங்கள்” சொல்கிறீர்கள்.

யார் எதை, எங்கே, எப்படி, என்ன, எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது “நீங்கள்” உபதேசிக்கிறீர்கள்.

ஆக, ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் செல்லரித்து, புழுத்துப் போய் துர்நாற்றமோடு முடை வாசம் வீசுகிறது.

எல்லாவற்றையும் சந்தோஷ் சுப்ரமணிய அப்பா போல “நீங்களே” முடிவெடுத்து விட்டால் அதை கேட்டு தலையாட்டி, அதன்பால் செல்ல உங்களுக்கு தேவையானது “குடிமக்கள் என்கிறப் பெயரில் இருக்கக் கூடிய அடிமை ஸோம்பிக்கள்”

தமிழர்கள் ஸோம்பிக்களும் அல்ல, அடிமைகளாக இருக்க விரும்புவர்களும் அல்ல.

End of our relationship. Thank you. Allow us to move on.

 NARAIN RAJAGOPALAN