தமிழ் வேறு, திராவிடம் வேறு என வாதம் செய்வோருக்கு அம்பேத்கர் கூறுவது என்ன?

தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு தமிதா என்றும், தமிளா என்றும் உருமாறி, பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை.

தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அல்ல, ஆரியர்கள் வருமுன் தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழியாகும். தமிழ் – காஷ்மீரத்தில் இருந்து குமரிவரையில் பேசப்பட்ட மொழி.

இது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும். ஆரியர்கள், நாகர்கள் மீதும் அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம் – வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைவிட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்துடன் கலந்தனர்.

தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்களின் தாய்மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால் தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் என்பது புரியும்.

தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்புப் பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும், நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகின்றன. நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிப்பிடும் பெயராகும்.

எனவே தாசர்கள்-நாகர்கள்-திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூற வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான்: ஒன்று ஆரியர்கள். மற்றொன்று நாகர்கள்.

அண்ணல் அம்பேத்கர் தொகுதி 7
( வடநாட்டுப் பெரியார் தென்னாட்டு அம்பேத்கர்/ தலித் தகவல் ஒருங்கிணைப்பு வெளியீடு)

THIRUMAVELAN PADIKARAMU

 

Read previous post:
0a1e
காஜல் அகர்வாலை ஆதரித்து நயன்தாரா, ஓவியாவை புறக்கணிக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இருந்தன. இவை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. தொடர்ந்து பல ஆண்டுகளாக அட்டை புதுப்பிக்கப்படாமல்,

Close