அஜித்தின் ‘விவேகம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்துவரும் அவரது 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘விவேகம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை அடுத்து அஜித் மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். வழக்கம் போல் பெயர் அறிவிக்கப்படாமலே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

80 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்துக்கு ‘விவேகம்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அவர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இவர்களுடன் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

‘விவேகம்’ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.