“என் சமகால கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா?” – விஜய்சேதுபதி கேள்வி!

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் நடித்துள்ள  படம் ‘றெக்க’. ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி விஜய்சேதுபதி கூறியதாவது:-

என்னுடைய ‘றெக்க’ படத்தின் பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனின் படத்தைக் காட்டியிருக்கிறோம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாரையும் காட்டி விட்டார்கள். என் சமகால கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா? கொண்டாடி இருக்கிறேன்.

ஒரே நாளில் ரிலீசானாலும், சிவகார்த்திகேயனின் ரெமோ’வும் ஓடட்டும். என்னுடைய ‘றெக்க’யும் ஓடட்டும். இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.

Read previous post:
r11
“லட்சுமிமேனன் சென்சிபிள் ஆர்ட்டிஸ்ட்”: விஜய்சேதுபதி பாராட்டு!

'காமன்மேன்' பி.கணேஷ் தயாரிப்பில், ரத்தின சிவா இயக்கத்தில், விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் நடித்துள்ள  படம் 'றெக்க'. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி

Close