விக்னேஷ் சிவன் – நயன்தாரா கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட்!

நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம்  வெற்றி பெற இருவரும் சேர்ந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று ஒரு தரப்பும், நடிக்க மாட்டார் என்று இன்னொரு தரப்பும் கூறிவருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.