3 மாநிலங்களில் 11 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2 தொகுதிகளிலும், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைந்து சிதம்பரத்தில் திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரத்தில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

ஆந்திரா: 1. குண்டூர் – ஆந்திர விசிக தலைவர் ஜேக்கப் வித்யாசாகர்; 2.சித்தூர் – சிவபிரசாத்; 3.விசாகபட்டினம் – ஜார்ஜ் வங்காரி; 4.திருப்பதி – முருகேசன்; 5.ராஜம்பேட் – சந்திரசேகர்; 6.கடப்பா – ரமாஜி இமானுவேல்.

கேரளா: 1.இடுக்கி – மா.செல்வராஜ்; 2.கோட்டயம் – ஜீவன் கே.விஜயன்; 3.கொல்லம் – கே.ஆர்.மீனா