மலையாளத்தில் ‘வைரமுத்து சிறுகதைகள்’

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது.

வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ் பெற்ற இதழான மாத்ரு பூமி மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கு  வைரமுத்துவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பு மலையாளத்தில் வெளிவரப் போகிறது.

அவர் எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைப்பை சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.