நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லர் ‘உத்தரவு மகாராஜா’

உதயா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஆஸிப் குரைஷி. ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ள இவர் தமிழ், இந்தி, வங்காள மொழிப் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு – உதயா மீண்டும் இதில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, மிஷாகோல் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோபாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் உதயா, பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

u6

படம் பற்றி இயக்குனர் ஆஸிப் குரைஸி கூறுகையில்,..“இது மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லர் கதை. பிரபு இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உதயா இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்தும், மொட்டை அடித்தும், தாடி வைத்தும் 3 விதமான கெட்-அப்களில், 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு இது வித்தியாசமான கதையாக இருக்கும். ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா

இசை – நரேன் பாலகுமார்

பாடல்கள் – அமரர் முத்துக்குமார்

எடிட்டிங் – டான் போஸ்கோ

ஸ்டண்ட் – தளபதி தினேஷ்

,நடனம் – சின்னிபிரகாஷ்