ஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைக்கா புரொடக்சன்ஸ் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘2 பாய்ண்ட் ஓ’.

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படும் இப்படத்திற்கு தற்போது தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு, நவம்பர் 29ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.